டைனமைட் வெடிபொருட்களுடன் இரு மீனவர்கள் கைது.!

248 0

மன்னார் தாழ்வுபாடு கடற்கரை பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு என தமது உடைமையில் ‘டைனமைட்’ வெடிபொருட்களை வைத்திருந்த சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இரு மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் இன்று வியாழன் (19) உத்தரவிட்டுள்ளது.

மன்னார் – தாழ்வுபாடு பகுதியில் இன்று வியாழக்கிழமை (19) அதிகாலை கடற்படையினர் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது மீன்பிடி நடவடிக்கைக்கு என தமது உடைமையில் டைனமைட் வெடிபொருட்களை வைத்திருந்த இரு மீனவர்களை ஓலைத்தொடுவாய் கடற்படையினர் கைது செய்தனர்.

அவர்களிடம் மூன்று தொகுதி டைனமைட் வெடிபொருட்கள் மீட்கப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளின் பின்னர் இரு சந்தேக நபர்களையும் மன்னார் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரியிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைத்தனர்.

இதனை தொடர்ந்து மேலதிக விசாரணையின் பின்னர் இன்று வியாழக்கிழமை மதியம் குறித்த இரு சந்தேக நபர்களையும் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் இரு மீனவர்களையும் எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அதே நேரம் கைப்பற்றப்பட்ட ‘டைனமைட்’ வெடிபொருட்கள் இரசாயன பகுப்பாய்வுக்கு என அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Related Post

அக்குரேகொட படுகொ*லை விவகாரம் ஒருவர் கைது.!

Posted by - February 21, 2026 0
சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் துப்பாக்கிதாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இதேவேளை, துப்பாக்கிச் சூட்டுக்கு முன்னர் துப்பாக்கிதாரியை பன்னிப்பிட்டி தங்குமிடத்திற்கு அழைத்து…

இந்திய நிதியுதவியுடன் வடக்கில் அபிவிருத்தித் திட்டங்கள்: ஆளுநர் நன்றி தெரிவிப்பு.!

Posted by - February 21, 2026 0
இந்திய அரசின் நிதியுதவியுடன் வடக்கு மாகாணத்தில் பல முக்கிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், இந்திய அரசுக்கும் மக்களுக்கும் வடக்கு மாகாண மக்கள் சார்பில் ஆளுநர் நா.…

மாகாண சபை தேர்தல் குறித்து ஆராய விசேட குழு நியமனம்

Posted by - February 20, 2026 0
நீண்ட காலமாக இழுபறியிலுள்ள மாகாண சபைத் தேர்தலை எந்த முறைமையின் கீழ் நடத்த வேண்டும் என்பது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்குரிய உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.…

பழிவாங்கும் அரசியலை விடுத்து மக்கள் நலனில் அக்கறை காட்டுக – அனுஷ பல்பிட்ட காட்டம்.!

Posted by - February 21, 2026 0
ஊடக அமைச்சின் முன்னாள் செயலாளர் மற்றும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு முன்னாள் தலைவருமான அனுஷ் பல்பிட்ட, ஊழல் குற்றச்சாட்டுகளால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில்,…

தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் பத்து பேரையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு.!

Posted by - February 19, 2026 0
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட 10 தமிழக மீனவர்களை எதிர்வரும் மார்ச் 05, 2026 வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் இன்று…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *