சீன தொழிலதிபருடன் இரகசிய சந்திப்பு – பெரு ஜனாதிபதி பதவி நீக்கம்.!

218 0

சீன தொழிலதிபருடன் இரகசியமாக சந்தித்ததாக குற்றச்சாட்டுகளில், பெருவின் இடைக்கால ஜனாதிபதி ஜோஸ் ஜெரி பதவியேற்ற நான்கே மாதங்களில் பாராளுமன்றத்தின் தீர்மானத்தின் மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஜெரி இரவு நேரத்தில் சீன தொழிலதிபர் ஜிஹுவா யாங்கை சந்தித்தது தொடர்பான விடியோ வெளியானது, இதனால் சர்ச்சை ஏற்பட்டது.

பெரு பாராளுமன்றத்தில் அவருக்கு எதிராக 75 வாக்குகள், ஆதரவாக 24 வாக்குகள் பதிவு செய்யப்பட்டு, ஜெரி பதவியை இழந்தார்.கடந்த ஒக்டோபரில், ஊழல் புகாரால் முன்னாள் ஜனாதிபதி தினா போலுவார்டே பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாராளுமன்றத் தலைவராக இருந்த ஜெரி இடைக்கால ஜனாதிபதியாக பொறுப்பேற்றார்.


வரும் ஏப்ரிலில் பெருவில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது பாராளுமன்றத் தலைவர் ஃபெர்னாண்டோ ரோஸ்பிக்லியோசி இடைக்கால ஜனாதிபதி பதவியை ஏற்க மறுத்துள்ள நிலையில், பாராளுமன்றம் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கவுள்ளதாகவும், அவர் நாட்டின் புதிய இடைக்கால ஜனாதிபதியாக பொறுப்பேற்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் அமெரிக்க நாடான பெருவில் இது கடந்த எட்டு ஆண்டுகளில் நிகழ்ந்த எட்டாவது ஆட்சி மாற்றம். இதுபோதும் அரசியல் சீர்திருத்தம் இல்லாமையினாலும், நாட்டின் பொருளாதாரம் 3.4 சதவீத வளர்ச்சியில் நிலைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் விஷம் கொடுத்துக் கொலை

Posted by - February 16, 2026 0
ரஷ்யாவின் மிக முக்கியமான எதிர்க்கட்சித் தலைவராக விளங்கிய அலெக்ஸி நவால்னி ,  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிறையில் உயிரிழந்தமைக்கு ‘தவளை விஷமே’ காரணம் என பிரித்தானியா உள்ளிட்ட…

மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இளம் வயதில் எழுதிய கடிதம் ஏலத்திற்கு.!

Posted by - February 19, 2026 0
பிரித்தானியாவின் மறைந்த மகாராணி இரண்டாம் எலிசபெத் தனது சிறுவயதில் கையினால் எழுதிய அரிய கடிதம் ஒன்று,எதிர்வரும் 27-ஆம் திகதி ஏலத்திற்கு வரவுள்ளது.சுமார் 4,000 பவுண்டுகள் வரை ஏலம்…

அணுசக்தி ஒப்பந்தம் குறித்து ட்ரம்ப் ஈரானுக்கு கடும் எச்சரிக்கை – பத்து நாட்கள் அவகாசம்!

Posted by - February 20, 2026 0
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்காவுடன் புதிய ஒப்பந்தத்தில் இணைவதற்கு வலியுறுத்தி கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க தலைநகரில் நடைபெற்ற அமைதிப்…

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஜெனீவாவில் இடம்பெறவுள்ள முக்கிய பேச்சுவார்த்தை!

Posted by - February 23, 2026 0
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான அணு ஆயுத பேச்சுவார்த்தை நடைபெற கூடிய இடம் மற்றும் நாள் உள்ளிட்ட விவரங்கள் தீர்மானிக்கப்பட்டுள்ளன.இதன்படி, ஜெனீவா நகரில் எதிர்வரும் 26-ஆம் திகதி…

மூன்றில் இரண்டு பங்கு கனேடியர்கள் அமெரிக்கா பிரச்சினைகளை உருவாக்குகிறது எனக் கருத்து.!

Posted by - February 20, 2026 0
சமீபத்திய ஆய்வில், கனடாவில் பெரும்பான்மையானோர் அமெரிக்காவை கனடாவின் கூட்டாளர் அல்ல என்றும், ரஷ்யாவைவிட உலக அமைதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்றும் கருதுகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. அமெரிக்கா மற்றும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *