ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் விஷம் கொடுத்துக் கொலை

151 0

ரஷ்யாவின் மிக முக்கியமான எதிர்க்கட்சித் தலைவராக விளங்கிய அலெக்ஸி நவால்னி ,  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிறையில் உயிரிழந்தமைக்கு ‘தவளை விஷமே’ காரணம் என பிரித்தானியா உள்ளிட்ட 05 ஐரோப்பிய நாடுகள் அதிரடி ஆதாரங்களை வெளியிட்டுள்ளன.

மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய பிரிட்டன் வெளிவிவகார செயலர் யவெட் கூப்பர்,

நவால்னியின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளை ஆய்வு செய்ததில் ‘எபிபாடிடைன்’ எனப்படும் மிக அரிதான நரம்பு விஷம் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்த நச்சு தென்னமெரிக்காவின் காடுகளில் வாழும் ஒரு வகை விஷத் தவளைகளில் இருந்து எடுக்கப்படுபவை.இது மார்ஃபினை விட 200 மடங்கு அதிக வீரியம் கொண்டது. இது உடலில் சென்றால் தசைப் பிடிப்பு, பக்கவாதம், சுவாச செயலிழப்பு ஏற்பட்டு மிக விரைவாக மரணம் நிகழும்.

பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி,  ஸ்வீடன் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘இந்த அரிதான நச்சுத்தன்மை கொண்ட விஷம் ரஷ்யாவின் இயற்கையில் எங்கும் காணப்படுவதில்லை. நவால்னி சிறையில் இருந்தபோது அவருக்கு இந்த விஷத்தைச் செலுத்த ரஷ்ய அரசுக்கு மட்டுமே வாய்ப்பும், நோக்கமும் இருந்தது. எனவே அவரது மரணத்திற்கு கிரெம்ளின் மாளிகையே முழுப் பொறுப்பு.’

தமது கணவர் கொல்லப்பட்டதற்கான அறிவியல் பூர்வ ஆதாரம் கிடைத்துள்ளமை தொடர்பில் அலெக்ஸி நவால்னியின் மனைவி யூலியா,

‘முதல் நாளிலிருந்தே என் கணவர் விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டார் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். தற்போது அதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது. புட்டின் ஒரு கொலைகாரர், அவர் இதற்காகப் பதில் சொல்லியே ஆகவேண்டும்,’ எனத் தெரிவித்துள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுகளை ரஷ்யா வழக்கம் போல மறுத்துள்ளது. இது மேற்கத்திய நாடுகளின் திட்டமிடப்பட்ட ‘தகவல் யுத்தம்’ எனவும், தங்கள் நாட்டுப் பிரச்சினைகளில் இருந்து திசைதிருப்பவே இத்தகைய பொய்களைப் பரப்புவதாகவும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சு குற்றம்சாட்டியுள்ளது.

Related Post

மூன்றில் இரண்டு பங்கு கனேடியர்கள் அமெரிக்கா பிரச்சினைகளை உருவாக்குகிறது எனக் கருத்து.!

Posted by - February 20, 2026 0
சமீபத்திய ஆய்வில், கனடாவில் பெரும்பான்மையானோர் அமெரிக்காவை கனடாவின் கூட்டாளர் அல்ல என்றும், ரஷ்யாவைவிட உலக அமைதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்றும் கருதுகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. அமெரிக்கா மற்றும்…

அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் தற்காலிக வரி அதிகரிப்பு!

Posted by - February 23, 2026 0
அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் விதிக்கப்பட்டுள்ள தற்காலிக வரி வீதத்தை மேலும் ஐந்து வீதத்தால் அதிகரிக்க அமெரிக்கா ஜனாதிபதி ரொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார்.இதற்கமைய, குறித்த வரியின்…

வேற்றுகிரகவாசிகள் குறித்த ரகசிய தகவல்களை வெளியிட டிரம்ப் உத்தரவு.!

Posted by - February 20, 2026 0
வேற்றுகிரகவாசிகள் தொடர்பான அமெரிக்க அரசின் ரகசிய ஆவணங்களை வெளியிட ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.அமெரிக்காவின் நெவாடா பகுதியில் ”ஏரியா-51”ல் வேற்றுகிரகவாசியை வைத்து ரகசியமாக ஆய்வு செய்து வருவதாக தகவல்கள்…

கிறிஸ்மஸுக்கு முன்னர் காணாமல் போன நபர் ஒருவரின் உடல் ஏர் ஆற்றில் (River Ayr) கண்டெடுப்பு!

Posted by - February 16, 2026 0
கிறிஸ்துமஸிற்கு முன்பிருந்து காணாமல் போன ஒருவரைத் தேடும் பணி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் மாக்லைன் (Mauchline) அருகே உள்ள ஏர் ஆற்றில் ஒரு மனிதனின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.…

தாலிபான் புதிய சட்டம்: பெண்கள் கடும் அதிர்ச்சி.!

Posted by - February 20, 2026 0
ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி நடக்கும் நிலையில், அவர்கள் கொண்டு வந்த புதிய சட்டம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதிய சட்டத்தின்படி கணவர்கள் தங்களின் மனைவியையும், குழந்தைகளையும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *