நாட்டை வந்தடைந்தார் IMF இன் முகாமைத்துவ பணிப்பாளர்!

198 0

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா, மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (16) இலங்கை வந்தடைந்தார்.

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக வருகை தந்த அவர், எதிர்வரும் புதன்கிழமை வரை நாட்டில் தங்கியிருப்பார்.

இந்த விஜயத்தின் போது, கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, அரசாங்க அதிகாரிகள் மற்றும் முக்கிய தரப்பினரை சந்திக்கவுள்ளதுடன், ‘டித்வா’ (Ditwa) சூறாவளியினால் நாட்டிற்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து நேரடியாக அவதானிக்கவுள்ளார்.

அத்துடன், நாட்டை வழமைக்குக் கொண்டு வரும் பணிகளுக்கு ஆதரவளிக்கக்கூடிய வழிகள் மற்றும் நாட்டின் பிரஜைகளுக்கு மிகவும் வலுவான எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கு சர்வதேச நாணய நிதியம் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.

Related Post

சாதாரண தரப் பரீட்சை நேர அட்டவணை குறித்து அறிவிப்பு

Posted by - February 16, 2026 0
2025 (2026) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் நேர அட்டவணை குறித்து விசேட அவதானம் செலுத்துமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ. கே. எஸ்.…

போரதீவுப்பற்று பிரதேசத்தில் வீதி சீர்செய்யப்பட்டு பொதுமக்களுக்கு திறந்து வைப்பு.!

Posted by - February 21, 2026 0
மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள நவகிரிகுளம் வான் கதவுகள் திறக்கப்பட்டதன் காரணமாக, போரதீவுப்பற்று பிரதேசம் பகுதியில் உள்ள வேத்துச்சேனை பிரதான வீதி மீண்டும் சேதமடைந்துள்ளது.தொடர்ச்சியாக பெய்த கடும் மழையால்…

ஹெரோயின், மின்னணு தராசுடன் போதைப்பொருள் வியாபாரி கைது.!

Posted by - February 21, 2026 0
களுத்துறை மாவட்டத்தில், பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலான பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 31 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பாணந்துறை பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியக…

முச்சக்கரவண்டி – நோயாளர் காவு வண்டி நேருக்கு நேர் மோதி விபத்து.!

Posted by - February 21, 2026 0
அக்குரஸ்ஸ மாத்தறை பிரதான சாலையில் பரதுவ கோட்டா போதி அருகே பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டியும் நோயாளர் காவு வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.இவ் விபத்து இன்று (21)…

ஊழல் குற்றவாளிகள் சட்டத்திலிருந்து தப்ப முடியாது.!

Posted by - February 20, 2026 0
“நாமல் ராஜபக்ஷ சிறைக்குச் சென்றால் அங்கிருந்தே ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவார் என மொட்டுக் கட்சி கூறுவது வேடிக்கையானது. அவர் சிறைக்குச் செல்வது தேர்தல் வெற்றிக்காக அல்ல,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *