இன்ஸ்டாகிராமில் 10 கோடி பின்தொடர்பாளர்களை கடந்த முதல் உலகத் தலைவர் – பிரதமர் மோடி!

409 0

இன்ஸ்டாகிராமில் 10 கோடி பின்தொடர்பாளர்களை கடந்த முதல் உலகத் தலைவர் என்ற சாதனையைப் பிரதமர் நரேந்திர மோடி படைத்துள்ளார்.

பிரதமர் மோடிக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பைவிட இரண்டு மடங்கு அதிக பின்தொடர்பாளர்கள் இன்ஸ்டாகிராமில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2014 ஆம் ஆண்டு மெட்டாவுக்குச் சொந்தமான இன்ஸ்டாகிராம் சமூக ஊடகப் பக்கத்தில் பிரதமர் மோடி கணக்கைத் தொடங்கினார்.

உலக அரசியல் தலைவர்களின் பிரதமர் மோடிக்கு அடுத்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 4.32 கோடி பின்தொடர்பாளர்களை கொண்டுள்ளார்.

இந்தோனேசிய ஜனாதிபதி பிரபோவோ சுபியாந்தோவை 1.5 கோடி பேரும், பிரேசில் அதிபரை 1.44 கோடி பேரும், துருக்கி அதிபரை 1.16 கோடி பேரும், அர்ஜென்டினா ஜனாதிபதியை 64 லட்சம் பேரும் பின்தொடர்கிறார்கள்.

பிரதமர் மோடிக்கு அடுத்த இடங்களில் உள்ள 5 உலக அரசியல் தலைவர்களின் மொத்த பின்தொடர்பாளர்களைவிட மோடியை அதிக பேர் பின்தொடர்கிறார்கள்.

இந்திய அளவிலும் மோடிக்கும் மற்ற அரசியல் தலைவர்களின் பின்தொடர்பாளர்களின் எண்ணிக்கைக்கும் நிறைய இடைவெளி இருக்கின்றது.

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை 1.61 கோடி பேரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை 1.26 கோடி பேரும் பின்தொடர்கிறார்கள்

Related Post

நாட்டில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் அதிகரிப்பு

Posted by - February 20, 2026 0
நாட்டில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர். சாதாரண சந்தையில் முட்டை ஒன்று 35 ரூபாவிற்கும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றது.…

போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது.!

Posted by - February 20, 2026 0
ஒரு தொகை போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர், மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவினரால் நேற்று (19) மாலை கொழும்பு பாலத்துறை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த…

தாவரவியல் பூங்காக்களின் வருமானம் ஒரு பில்லியனை கடந்துள்ளது

Posted by - February 20, 2026 0
கடந்த 2025ஆம் ஆண்டிலும் தாவரவியல் பூங்காக்களின் வருமானம் ஒரு பில்லியன் ரூபாவைக் கடந்துள்ளதாக தேசிய தாவரவியல் பூங்காக்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த ஆண்டில் இலங்கையின் தாவரவியல் பூங்காக்களின்…

மார்ச் 12 முதல் அதிகளவு சமையல் எரிவாயு சந்தைக்கு!

Posted by - February 20, 2026 0
எதிர்வரும் மார்ச் மாதம் 12ஆம் திகதி முதல் சந்தைக்கு அதிகளவிலான லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க எதிர்பார்ப்பதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.எவ்வாறாயினும், கடந்த…

தளவாய் பகுதியில் கழிவுகள் கொட்டும் மர்ம நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் – நிலாந்தன் அறிவிப்பு.!

Posted by - February 21, 2026 0
ஏறாவூர் பகுதியில் இருந்து கொண்டு வரப்படும் கழிவு மூட்டைகள், தளவாய் பகுதியில் உள்ள ஆலயங்கள், பிரதான வீதிகள் மற்றும் மக்கள் வாழும் இடங்களில் வீசப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *