ஜோன்ஸ்டனுக்கும் , புதல்வர்களுக்கும் மார்ச் 6 வரை விளக்கமறியல் நீடிப்பு.!

427 0

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அவரது இரு புதல்வர்கள் மற்றும் மற்றுமொரு சந்தேகநபர் ஆகியோரை எதிர்வரும் மார்ச் 6ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இதேவேளை, இக்குற்றச்சாட்டுடன் தொடர்புடைய மற்றைய சந்தேகநபரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை வத்தளை நீதிவான் நீதிமன்றம் முன்னிலையில் சந்தேகநபர்கள் ஆஜர்ப்படுத்தப்பட்டபோது இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

லங்கா சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்று, கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் முறையற்ற வகையில் பயன்படுத்தப்பட்டதாக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.


இக்குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இரு புதல்வர்கள் உள்ளிட்ட நால்வர், நீண்ட நாள்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post

ஹட்டன் பிரதான வீதியில் கோர விபத்து – மூன்று பிள்ளைகளின் தாய் பலி.!

Posted by - February 21, 2026 0
அவிசாவளை – ஹட்டன் பிரதான வீதியின் எட்டியாந்தோட்டை, தனகொலவத்த பகுதியில் நேற்று (20) மாலை இடம்பெற்ற கோர விபத்தில் 46 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாய் சம்பவ…

வாழைச்சேனையில் கைப்பற்றப்பட்ட பெருமளவான சட்டவிரோத மதுபானம்!

Posted by - February 19, 2026 0
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிண்ணியடி பிரதேசத்தில் உள்ள ஆற்றின் நடுவில் பல வருடங்களாக நடைபெற்று வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் இன்று அதிகாலை கிழக்கு மாகாண பொலிஸ்…

அம்பாறையில் தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழை; தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம்.!

Posted by - February 20, 2026 0
அம்பாறை மாவட்டத்தில் தொடர் அடை மழை பெய்து வருவதன் காரணமாக மீண்டும் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் அடை மழை காரணமாக மரங்கள் முறிந்துள்ளதுடன்…

விசாரணைக்கு வருவதற்கு ரணிலின் மனைவி மறுப்பு; உடல்நிலையைக் காரணம் காட்டி சி.ஐ.டிக்கு கடிதம்.!

Posted by - February 20, 2026 0
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மனைவி பேராசிரியர் மைத்ரி விக்கிரமசிங்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இன்று ஆஜராக முடியாது என அறிவித்துள்ளார்.…

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

Posted by - February 21, 2026 0
நாட்டில் இன்றைய தினம் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், மழை நிலைமை அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *