விகாராதிபதியினால் தாக்கல் செய்யப்பட்ட, ரீட் மனு – ஏப்ரல் மாதம் அழைக்குமாறு உத்தரவு

400 0

திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் ஒரு பகுதியை இடித்து அகற்றுமாறு கடலோர பாதுகாப்பு திணைக்களம் பிறப்பித்துள்ள உத்தரவை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்கும் கட்டளையை பிறப்பிக்குமாறு கோரி, அதன் விகாராதிபதி தாக்கல் செய்த ரீட் மனுவை ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த விகாரையின் விகாராதிபதி திருகோணமலை கல்யாண வம்ச திஸ்ஸ தேரரினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அதன்படி, தம்மிக கணேபொல மற்றும் ஆதித்ய பட்டபெந்திகே ஆகியோரைக் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று (20) இந்த மனு அழைக்கப்பட்டது.

இதன்போது, இந்த மனுவைச் சமரசமாகத் தீர்ப்பது குறித்த விடயங்களைப் பரிசீலிப்பதற்காக ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டது.

Related Post

ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் குற்றச்சாட்டில் இருந்தால் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் – சஜித் பிரேமதாஸ.!

Posted by - February 21, 2026 0
ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த எவரேனும் பாதாள உலகச் செயற்பாடுகள் அல்லது போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புடையவர்களாக இருந்தால், அவர்களுக்கு எதிராக தயக்கமின்றி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்…

இந்தியா – இலங்கை உறவில் புதிய இராஜதந்திர அத்தியாயம்: மோடி – அநுர விசேட சந்திப்பு.!

Posted by - February 19, 2026 0
அரசுமுறைப் பயணமாக இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பு நேற்று இரவு புதுடில்லியில் நடைபெற்றது.…

முச்சக்கரவண்டி – நோயாளர் காவு வண்டி நேருக்கு நேர் மோதி விபத்து.!

Posted by - February 21, 2026 0
அக்குரஸ்ஸ மாத்தறை பிரதான சாலையில் பரதுவ கோட்டா போதி அருகே பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டியும் நோயாளர் காவு வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.இவ் விபத்து இன்று (21)…

கஞ்சாவுடன் குடும்பப் பெண் கைது.!

Posted by - February 20, 2026 0
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு 10ஆம் வட்டாரம் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய குடும்பப் பெண் ஒருவர், தனது வீட்டில் விற்பனை நோக்கத்திற்காக கஞ்சா வைத்திருந்த குற்றத்திற்காக கைது…

இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் வாகனம் ஓட்டும் வெளிநாட்வர்கள் மீது வழக்கு தொடரப்படும் – பொலிஸார் எச்சரிக்கை.!

Posted by - February 19, 2026 0
நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மற்றும் உதவிப் பொலிஸ்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *