உத்தரபிரதேசத்தில் சிறுவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய தம்பதியருக்கு மரண தண்டனை!

128 0

உத்தர பிரதேசத்தில், 10 ஆண்டுகளாக, 3 – 16 வயது வரையிலான சிறுவர்களை பாலியல் வன்கொடுமை செய்து, அதை இணையதளத்தில் பதிவேற்றிய தம்பதிக்கு, ‘போக்சோ’ நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

உத்தர பிரதேசத்தின் நீர்ப்பாசன துறையில், இளநிலை பொறியாளராக பணிபுரிந்தவர் ராம்பவன் மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இருவரும் 2010 – 20 வரை சித்ரகூட் மற்றும் பாண்டா பகுதியைச் சேர்ந்த சிறுவர்களை, பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அதை வீடியோ எடுத்து சட்ட விரோத இணையதளங்களுக்கு விற்றுள்ளனர்.

சிறுவர் ஆபாச வீடியோ தொடர்பாக, உத்தர பிரதேச சைபர் கிரைம் பொலிஸார் நடத்திய சோதனையில், குறித்த தம்பதியின் கொடூர செயல் வெளிச்சத்துக்கு வந்தது.உத்தர பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 3 – 16 வயது வரையிலான சிறுவர்களை, இவர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆன்லைன் கேம் விளையாட வைப்பதுஇதேவேளை சந்தேகநபர்கள் சிறுவர்களின் பாலியல் வீடியோக்கள் வெளிநாட்டுக்கும் விற்கப்பட்டதும் தெரிய வந்தது.இவர்களால் பாதிப்படைந்த சிறுவர்கள் இன்றும் அவதிப்பட்டு வருகின்றனர்.இது குறித்து, 2020ல் வழக்குப்பதிவு செய்த குற்றப்புலனாய்வு துறையினர் குறித்த தம்பதியின் வீட்டில் சோதனை நடத்தியது.

இதில், 8 லட்சம் ரூபாய், 12 மொபைல் போன்கள், இரண்டு மடிக்கணினிகள் , ஒரு ஹார்ட் டிஸ்க், ஆறு பென் டிரைவ்கள் கைப்பற்றப்பட்டன.இந்நிலையில் இருவர் மீதும் போக்சோ மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பாண்டா போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. ஆறு ஆண்டுகளாக நடந்த வழக்கில், பாதிக்கப்பட்ட சிறுவர்கள் உட்பட, 74 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டன.

இதையடுத்து குறித்த தம்பதி செய்த குற்றங்கள் அரிதிலும் அரிதானவை எனவும் மிகவும் ஒழுக்கக்கேடானது எனவும் இதுபோன்ற குற்றங்கள், குழந்தைகளின் வாழ்க்கையை அழிப்பது மட்டுமல்லாமல், சமூகத்தின் தார்மீக அடித்தளத்தையும் உலுக்குகின்றன எனவும் தெரிவித்து குற்றங்கள் உறுதி செய்யப்பட்டதால், போக்சோ சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ், இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அவர்கள் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் பாதிக்கப்பட்டவர்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் எனவும் மத்திய – மாநில அரசுகள் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு, தலா, 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி அறிவித்துள்ளார்.

Related Post

பிரதமர் நரேந்திர மோடியை, சுந்தர் பிச்சை சந்தித்து பேச்சுவார்த்தை!

Posted by - February 19, 2026 0
நேற்று, டெல்லியில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாட்டிற்கு கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை இந்தியா வந்துள்ளமைக்கு ஏற்ப பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து…

இந்தியப் பிரதமர் மோடி அடுத்த வாரம் இஸ்ரேல் விஜயம்!

Posted by - February 16, 2026 0
பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்தும் முயற்சிகளுக்கு மத்தியில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த…

பணம் கொடுக்காததால்; இந்திய விமானம் பறக்க தடை விதித்த நாடு!

Posted by - February 20, 2026 0
வங்கதேச வான்வெளியில் இந்திய விமானமான ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் விமானங்கள் பறக்க அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம்…

89,000 இலங்கைத் தமிழர்களின் குடியுரிமைப் பிரச்சினைகளைத் தீர்க்க பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

Posted by - February 16, 2026 0
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக மாநிலத்தில் வாழும் இலங்கைத் தமிழர்களின் நீண்டகால குடியுரிமைப் பிரச்சினை மற்றும் சட்டப்பூர்வ…

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் விரைவில்.!

Posted by - February 19, 2026 0
தமிழக சட்டசபைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *