இலங்கை அணியின் தோல்வியை கடுமையாக விமர்சித்த சங்கக்கார.!

206 0

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் நேற்று (22) இங்கிலாந்து தேசிய கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இலங்கை தேசிய கிரிக்கெட் அணி 51 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது.
இந்தத் தோல்வியைத் தொடர்ந்து, இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தனது ‘X’ சமூக வலைத்தளப் பதிவில் கருத்து வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டதாவது:


“இங்கிலாந்துக்கு எதிரான போட்டி இலங்கை அணிக்குப் சிறப்பான ஆட்டமாக அமையவில்லை. பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட திட்டங்களைத் துல்லியமாக நிறைவேற்றினர். அவர்களின் செயல்பாடு பாராட்டத்தக்கதாக இருந்தது.ஆனால், துடுப்பாட்ட வீரர்கள் எதிர்பார்ப்புக்கு அமைவாக செயல்படவில்லை. துடுப்பாட்டத்தில் தேவையான தன்னம்பிக்கையும் தெளிவும் காணப்படவில்லை. போட்டியின் நிலைமையைப் புரிந்து கொண்டு ஆட வேண்டிய தருணங்களில் தவறான அணுகுமுறை வெளிப்பட்டது.


குறிப்பாக, கமில் மிஷாரவின் துடுப்பாட்டத்தில் காணப்பட்ட முனைப்பும் உறுதியும் இப்போட்டியில் இல்லாதது தெளிவாகப் பட்டது. மேலும், ஆடுகளத்தின் தன்மையையும் போட்டியின் சூழலையும் சரியாக மதிப்பீடு செய்யத் தவறியதே இந்தத் தோல்விக்கான முக்கிய காரணமாக அமைந்தது” என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை அணியின் இந்தத் தோல்வி, தொடரின் அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கு சவாலாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related Post

டி:20 உலகக் கிண்ணம்; இன்று இலங்கை – சிம்பாப்வே இடையிலான போட்டி.!

Posted by - February 19, 2026 0
2026 ஐசிசி ஆடவர் டி:20 உலகக் கிண்ணத்தில் இன்று (19) நடைபெறும் போட்டியில் இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகள் மோதுகின்றன.இந்தப் போட்டியானது இன்று பிறப்கல் 3.00 மணிக்கு…

உபாதையால் நீக்கப்பட்ட மதீஷவுக்கு பதிலாக டில்ஷான் மதுஷங்க இணைப்பு.!

Posted by - February 20, 2026 0
டி20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியில் மூன்றாவது மாற்றமாக, உபாதைக்கு உள்ளான மதீஷ பதிரணவுக்கு பதிலாக இடது கை வேகப்பந்து வீச்சாளர் டில்ஷான் மதுஷங்க உத்தியோகபூர்வமாக இணைக்கப்பட்டுள்ளார்.…

டி20 உலகக் கிண்ணம்: சூப்பர் 8 சுற்று – அணிகள், போட்டி விபரம்.!

Posted by - February 19, 2026 0
2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தான் அணியின் அபார வெற்றி அவர்களை சூப்பர் 8 கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. கொழும்பில் நடைபெறும் சூப்பர் 8…

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான்

Posted by - February 15, 2026 0
2026 உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று இரவு கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில்…

ஆறு விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்திய சிம்பாப்வே!

Posted by - February 20, 2026 0
கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானத்தில் நேற்றிரவு நடந்த 2026 ஐசிசி டி:20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கையை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சிம்பாப்வே அணியானது குழு B…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *