இந்தியா விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுர நாடு திரும்பினார்.!

299 0

இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில் நடைபெற்ற ‘AI Impact 2026’ சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, தனது உத்தியோகபூர்வ இந்தியப் பயணத்தை நிறைவு செய்து நேற்று வெள்ளிக்கிழமை இரவு நாடு திரும்பினார்.


ஜனாதிபதி தலைமையிலான இலங்கைப் பிரதிநிதிகள் குழு, நேற்று இரவு 10.04 மணியளவில் புதுடில்லியிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் UL-196 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தது.
இச்சர்வதேச மாநாட்டில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் எதிர்கால தாக்கம் மற்றும் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதார மாற்றங்கள் தொடர்பாக ஜனாதிபதி முக்கிய உரையாற்றினார்.

மேலும், இப்பயணத்தின் போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்களுடன் இருதரப்பு உறவுகள் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புகள் குறித்து கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்படுகிறது.ஜனாதிபதி மற்றும் தூதுக்குழுவினரை வரவேற்கும் பொருட்டு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

Related Post

கந்தரே பிரதேசத்தில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு.!

Posted by - February 21, 2026 0
மாத்தறை, கந்தரே பிரதேசத்தில் இன்று பிற்பகல் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்தவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன. மாத்தறை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த…

தங்க விலையில் மாற்றமில்லை: நகையக வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு.!

Posted by - February 20, 2026 0
உள்நாட்டுச் சந்தையில் இன்று தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை என அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24…

நாட்டை வந்தடைந்தார் IMF இன் முகாமைத்துவ பணிப்பாளர்!

Posted by - February 16, 2026 0
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா, மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (16) இலங்கை வந்தடைந்தார். மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக…

ஜோன்ஸ்டனுக்கும் , புதல்வர்களுக்கும் மார்ச் 6 வரை விளக்கமறியல் நீடிப்பு.!

Posted by - February 21, 2026 0
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அவரது இரு புதல்வர்கள் மற்றும் மற்றுமொரு சந்தேகநபர் ஆகியோரை எதிர்வரும் மார்ச் 6ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம்…

டைனமைட் வெடிபொருட்களுடன் இரு மீனவர்கள் கைது.!

Posted by - February 19, 2026 0
மன்னார் தாழ்வுபாடு கடற்கரை பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு என தமது உடைமையில் ‘டைனமைட்’ வெடிபொருட்களை வைத்திருந்த சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இரு மீனவர்களையும் விளக்கமறியலில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *