வீதியை விட்டு விலகி கால்வாயில் கவிழ்ந்த உழவு இயந்திரம்; இளைஞன் உயிரிழப்பு.!

149 0

அனுராதபுரம், ஹரிகஸ்வெவ – கலங்குட்டிய கால்வாய் அருகே இடம்பெற்ற உழவு இயந்திர விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர் கலங்குட்டிய பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கலங்குட்டிய கால்வாய் வீதியில் நேற்று பயணித்துக்கொண்டிருந்த உழவு இயந்திரம், எதிர்பாராத விதமாக வீதியை விட்டு விலகி கால்வாய்க்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் உழவு இயந்திரத்தை செலுத்திய ஓட்டுநர் படுகாயமடைந்த நிலையில், உடனடியாக மீட்கப்பட்டு தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை ஹரிகஸ்வெவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Post

வடக்கின் சீரற்ற ஆசிரிய வளப் பரவலாக்கத்தை விரைந்து சீர்ப்படுத்துமாறு ரவிகரன் எம்.பி கோரிக்கை.!

Posted by - February 20, 2026 0
வடக்கு மாகாணத்தின் சீரற்ற ஆசிரியவளப் பரவலாக்கத்தினால் வன்னிப் பிராந்தியத்திலுள்ள மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் பாதிக்கப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், எனவே சீரற்ற ஆசிரிய…

கல்லுண்டாய் வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை.!

Posted by - February 20, 2026 0
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் கல்லுண்டாய் பகுதியில் குடியமர்த்தப்பட்டுள்ள மக்கள் எதிர்நோக்கும் நீண்டகால வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்கில் விசேட கலந்துரையாடல் ஒன்று, வடக்கு மாகாண ஆளுநர்…

தேரர்களை அவமதிக்கும் அநுர அரசாங்கம்! கொழும்பில் ஒன்றுகூடிய தேரர்கள்

Posted by - February 20, 2026 0
பௌத்தலோக மாவத்தையில் நேற்றையதினம்(20.2.2026) முந்நூறுக்கும் மேற்பட்ட தேரர்களுடன் மாநாடு இடம்பெற்றது. இதன்போது, பௌத்த மதத்திற்கும், பௌத்த தேரரிற்கும் இலங்கையின் தற்போதைய தேசியமக்கள் சக்தி அரசாங்கம் மதிப்பளிக்கவில்லை என்ற…

தாமதித்தால் பாதிப்பு உங்களுக்கே – சஜித் அணிக்கு ஐ.தே.க. எச்சரிக்கை.!

Posted by - February 19, 2026 0
எதிர்வரும் தேர்தலை ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இணைந்த பலமான கூட்டணியாகவே எதிர்கொள்ளும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிச் செயலாளர் மற்றும்…

கட்டுப்பாட்டை இழந்த கார் ஏற்படுத்திய விபரீதம்: ஒருவர் உயிரிழப்பு.!

Posted by - February 20, 2026 0
குருநாகல் – நாரம்மல வீதியில் நேற்று இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர் உஹமிய பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *