வீதியை விட்டு விலகி கால்வாயில் கவிழ்ந்த உழவு இயந்திரம்; இளைஞன் உயிரிழப்பு.!

306 0

அனுராதபுரம், ஹரிகஸ்வெவ – கலங்குட்டிய கால்வாய் அருகே இடம்பெற்ற உழவு இயந்திர விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர் கலங்குட்டிய பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கலங்குட்டிய கால்வாய் வீதியில் நேற்று பயணித்துக்கொண்டிருந்த உழவு இயந்திரம், எதிர்பாராத விதமாக வீதியை விட்டு விலகி கால்வாய்க்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் உழவு இயந்திரத்தை செலுத்திய ஓட்டுநர் படுகாயமடைந்த நிலையில், உடனடியாக மீட்கப்பட்டு தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை ஹரிகஸ்வெவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Post

சிறுநீரகத்தை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்ட முன்னாள் பெண் போராளி: காரணமான இருந்த கந்துவட்டி கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும் – வேந்தன் கண்டனம்.!

Posted by - February 21, 2026 0
மன்னார் பகுதியில் கந்துவட்டி தொல்லையைத் தாங்க முடியாமல், முன்னாள் பெண் போராளி ஒருவர் தனது ஒரு சிறுநீரகத்தை கொழும்பு சென்று விற்று கடனை அடைத்த சம்பவம் அதிர்வலைகளை…

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

Posted by - February 21, 2026 0
நாட்டில் இன்றைய தினம்  பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்   காணப்படுவதுடன், மழை நிலைமை அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…

மாகாண சபை தேர்தல் குறித்து ஆராய விசேட குழு நியமனம்

Posted by - February 20, 2026 0
நீண்ட காலமாக இழுபறியிலுள்ள மாகாண சபைத் தேர்தலை எந்த முறைமையின் கீழ் நடத்த வேண்டும் என்பது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்குரிய உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.…

காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் வழக்கில் நீதி கோரி வடமராட்சியில் ஆர்ப்பாட்டம்.!

Posted by - February 21, 2026 0
பருத்தித்துறை பகுதியில் இன்று (21.02.2026) நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டம் காண்பவர்கள் அனைவரையும் கலங்கடித்தது.2007.02.15 அன்று யாழ்ப்பாணம் கலிகைச் சந்தியில் வைத்து கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் சு. இராமச்சந்திரன்…

இலங்கை – பிரேசில் ஜனாதிபதிகளிடையே இருதரப்பு பேச்சுவார்த்தை.!

Posted by - February 20, 2026 0
இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரேசில் ஜனாதிபதி லுலா த சில்வா ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ இருதரப்புப் பேச்சுவார்த்தை நேற்று வியாழக்கிழமை பிற்பகல் நடைபெற்றது. இந்தியாவின்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *