வடக்கு இளைஞர்களுக்கு வான்வழித் துறை வாய்ப்பு:பலாலியில் உயர்மட்டக் குழு முக்கிய கள விஜயம்!

388 0

வடக்கு மாகாண இளைஞர்களிடையே சிவில் விமானப் போக்குவரத்துத் துறையைப் பற்றிய கல்வியை ஊக்குவிப்பது நோக்கமாக, விசேட உயர்மட்டக் கலந்துரையாடலும், அதன்பின்னர் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு நேரடி களப் பயணமும் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சியில் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக, பிரதி அமைச்சர் பொறியியியலாளர் ஜனித்த ருவன் கொடித்துவ, அமைச்சின் செயலாளர் டபிள்யூ.டபிள்யூ.எஸ். மங்கள, சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் சுனில் ஜயரத்ன், பணிப்பாளர் நாயகம் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி கப்டன் தமிந்த் ரம்புக்வெல்ல ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்குழுவினரை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் உத்தியோகபூர்வமாக வரவேற்றார்.அதனைத் தொடர்ந்து, ஆளுநர் செயலகத்தில் சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் புதிய வாய்ப்புகளை உருவாக்குவது மற்றும் இளைஞர்களுக்கான கல்வி முன்னெடுக்கல் குறித்த விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் நடைபெற்றது.


கலந்துரையாடலுக்குப் பிறகு, குழுவினர் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கு நேரில் சென்று அங்கு அன்றாட சேவைகள் மற்றும் செயற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடமிருந்து விளக்கமறிந்தனர். விமான நிலையத்தின் தற்போதைய தேவைகள், கட்டுமானப் பணிகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. மேலும், நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை அமைச்சர் உள்ளிட்ட உயர்மட்டக் குழுவினர் நேரில் பார்வையிட்டனர்.

Related Post

சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆணின் உடலம், பொதுமக்களின் உதவியை நாடியுள்ள காவல்துறை.!

Posted by - February 19, 2026 0
மாத்தளை காவல் பிரிவின் கலல்பிட்டி பகுதியில் உள்ள பரகெடி ஓயா எறும்புப் புற்றுக்கு மேலே உள்ள ஒரு பாறைக்கு அருகில் ஒரு சிதைந்த ஆணின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது…

வீதியை விட்டு விலகி கால்வாயில் கவிழ்ந்த உழவு இயந்திரம்; இளைஞன் உயிரிழப்பு.!

Posted by - February 20, 2026 0
அனுராதபுரம், ஹரிகஸ்வெவ – கலங்குட்டிய கால்வாய் அருகே இடம்பெற்ற உழவு இயந்திர விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர் கலங்குட்டிய பகுதியைச் சேர்ந்த 26…

விகாராதிபதியினால் தாக்கல் செய்யப்பட்ட, ரீட் மனு – ஏப்ரல் மாதம் அழைக்குமாறு உத்தரவு

Posted by - February 20, 2026 0
திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் ஒரு பகுதியை இடித்து அகற்றுமாறு கடலோர பாதுகாப்பு திணைக்களம் பிறப்பித்துள்ள உத்தரவை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்கும் கட்டளையை பிறப்பிக்குமாறு கோரி,…

கட்டுப்பாட்டை இழந்த கார் ஏற்படுத்திய விபரீதம்: ஒருவர் உயிரிழப்பு.!

Posted by - February 20, 2026 0
குருநாகல் – நாரம்மல வீதியில் நேற்று இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர் உஹமிய பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.…

பிரதமரின் தலைமையில் மாத்தறை கலை விழா கோலாகலமாக ஆரம்பம்.!

Posted by - February 20, 2026 0
மாத்தறை – உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கலைஞர்களின் பல்வேறு கலைப்படைப்புகளை ஒருங்கிணைத்து நடக்கும் ‘மாத்தறை கலை விழா’ (Matara Festival for the Arts) பிரதமர் கலாநிதி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *