தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் விரைவில்.!

384 0

தமிழக சட்டசபைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் வரும் 26 மற்றும் 27ஆம் தேதிகளில் சென்னைக்கு வருகை தருகிறார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு ஆணையம் பல்வேறு முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இதன் மத்தியில், மார்ச் 6ஆம் தேதி தமிழ்நாட்டில் 6 இடங்களுக்கு ராஜ்யசபா தேர்தலும் நடைபெற உள்ளது.
சென்னையில் நடைபெறவுள்ள ஆலோசனை கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.

மேலும், 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு, வாக்குப்பதிவு இயந்திரம் (EVM) மூலம் வாக்களிக்கும் முறை மற்றும் வாக்கை உறுதிப்படுத்தும் செயல்முறைகள் குறித்து மாவட்ட அளவில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுவருகின்றன. தமிழ்நாட்டின் இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 23ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது.

Related Post

பணம் கொடுக்காததால்; இந்திய விமானம் பறக்க தடை விதித்த நாடு!

Posted by - February 20, 2026 0
வங்கதேச வான்வெளியில் இந்திய விமானமான ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் விமானங்கள் பறக்க அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம்…

89,000 இலங்கைத் தமிழர்களின் குடியுரிமைப் பிரச்சினைகளைத் தீர்க்க பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

Posted by - February 16, 2026 0
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக மாநிலத்தில் வாழும் இலங்கைத் தமிழர்களின் நீண்டகால குடியுரிமைப் பிரச்சினை மற்றும் சட்டப்பூர்வ…

2026 AI தாக்க உச்சி மாநாடு இன்று டெல்லியில் ஆரம்பம்!

Posted by - February 16, 2026 0
உலகத் தலைவர்கள் கலந்து கொள்ளும் உலகளாவிய 2026 செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடும் கண்காட்சியும் இன்று (16) புது டெல்லியில் தொடங்குகிறது. ஐந்து நாள் AI…

உத்தரபிரதேசத்தில் சிறுவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய தம்பதியருக்கு மரண தண்டனை!

Posted by - February 23, 2026 0
உத்தர பிரதேசத்தில், 10 ஆண்டுகளாக, 3 – 16 வயது வரையிலான சிறுவர்களை பாலியல் வன்கொடுமை செய்து, அதை இணையதளத்தில் பதிவேற்றிய தம்பதிக்கு, ‘போக்சோ’ நீதிமன்றம் மரண…

பிரதமர் நரேந்திர மோடியை, சுந்தர் பிச்சை சந்தித்து பேச்சுவார்த்தை!

Posted by - February 19, 2026 0
நேற்று, டெல்லியில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாட்டிற்கு கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை இந்தியா வந்துள்ளமைக்கு ஏற்ப பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *