சாதாரண தரப் பரீட்சை நேர அட்டவணை குறித்து அறிவிப்பு

228 0

2025 (2026) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் நேர அட்டவணை குறித்து விசேட அவதானம் செலுத்துமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ. கே. எஸ். இந்திகா குமாரி லியனகே பரீட்சார்த்திகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

நாளை (17) ஆரம்பமாகவுள்ள பரீட்சை தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மற்றும் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் உள்ள நேர அட்டவணையை மாத்திரம் பின்பற்றுமாறு வலியுறுத்தினார்.

கடந்த ஆண்டை விட இம்முறை சாதாரண தரப் பரீட்சையின் ஐந்தாவது, ஆறாவது, ஏழாவது மற்றும் எட்டாவது நாட்களுக்கான பாடங்களின் வரிசை முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், சரியான நேர அட்டவணையை மாத்திரம் பயன்படுத்துமாறு இந்திகா குமாரி லியனகே மேலும் குறிப்பிட்டார்.

நாளை காலை 8.30 மணிக்கு பரீட்சை ஆரம்பமாகவுள்ளதுடன், பரீட்சார்த்திகள் பரீட்சை ஆரம்பமாவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னதாக நிலையங்களுக்குச் செல்ல வேண்டும். அத்துடன், பிற்பகல் நேரப் பரீட்சைகள் 1.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன், பரீட்சார்த்திகள் மதியம் 12.30 மணிக்குள் பரீட்சை நிலையங்களுக்கு வருகை தர வேண்டும் எனவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

Related Post

மார்ச் 12 முதல் அதிகளவு சமையல் எரிவாயு சந்தைக்கு!

Posted by - February 20, 2026 0
எதிர்வரும் மார்ச் மாதம் 12ஆம் திகதி முதல் சந்தைக்கு அதிகளவிலான லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க எதிர்பார்ப்பதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.எவ்வாறாயினும், கடந்த…

மன்னாரில் தொடரும் நகை அபகரிப்பு – பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரி குடும்ப நல உத்தியோகத்தர்கள் போராட்டம்.!

Posted by - February 21, 2026 0
மன்னார் மாவட்ட குடும்ப நல உத்தியோகத்தர்கள் இன்று (21) காலை கருப்பு பட்டி அணிந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். பின்னர் அவர்கள் மன்னார் மாவட்டச் செயலகம்…

இந்தியா விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுர நாடு திரும்பினார்.!

Posted by - February 21, 2026 0
இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில் நடைபெற்ற ‘AI Impact 2026’ சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, தனது உத்தியோகபூர்வ இந்தியப் பயணத்தை நிறைவு செய்து நேற்று…

குடும்பத் தகராறு கொலையில் முடிவு: மாமனாரின் கத்திக்குத்தில் மருமகன் பலி.!

Posted by - February 21, 2026 0
கேகாலை மாவட்டம், தெரணியகலை – மாலிபொட தேயிலைத் தொழிற்சாலைப் பிரிவில் இடம்பெற்ற குடும்பத் தகராறு கொலைச் சம்பவமாக மாறியுள்ளது.மாலிபொட பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய, ஒரு பிள்ளையின்…

தையிட்டி திஸ்ஸ விகாரை விடயம்: பௌத்த சாசன அமைச்சு பாரபட்சமாக செயற்படுகிறது – பாதிக்கப்பட்ட மக்கள் குற்றச்சாட்டு.!

Posted by - February 21, 2026 0
தையிட்டி பகுதியில் அமைந்துள்ள திஸ்ஸ விகாரை தொடர்பான காணி விவகாரத்தில் பௌத்த சாசன அமைச்சு பாரபட்சமான முறையில் செயற்படுகின்றது என பாதிக்கப்பட்ட மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *