ரசிகர்கள் எதிர்பார்த்த இந்தியா – பாக்கிஸ்தான் அணிகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று மோதுகின்றன!

79 0

2026 ஆம் ஆண்டு இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் அனைவரினதும் கவனத்தை ஈர்த்துள்ள இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி, இன்று (15) இரவு கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.

உள்ளூர் நேரப்படி இரவு 7.00 மணிக்கு போட்டி ஆரம்பமாகவுள்ளது.

இது இத்தொடரின் ‘A’ குழுவிற்கான போட்டியாக நடைபெறுவதுடன் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போட்டியை திட்டமிட்டபடி விசேட பாதுகாப்புக்கு மத்தியில் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உப தலைவர் ரவின் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

2026 இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போட்டி நடைபெறுமா இல்லையா என்பது குறித்து பெரும் சர்ச்சை நிலவியது.

இந்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் நெருக்கடி தீவிரமடைந்தமையே இதற்குக் காரணமாக அமைந்திருந்தது.

இதேவேளை, இந்தப் போட்டியை புறக்கணிப்பதாக முன்னதாக பாகிஸ்தான் தெரிவித்திருந்த போதிலும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் கோரிக்கையின் அடிப்படையில் பாகிஸ்தான் விளையாடுவதற்கு தீர்மானித்தது.

இந்நிலையில், குறித்தப் போட்டிக்கான அனைத்து டிக்கட்டுக்களும் நேற்றைய தினம் விற்றுத் தீர்ந்துள்ளதாகவும் எனவே ரசிகர்கள் டிக்கட் பெறும் நோக்கில் வரிசையில் நிற்க வேண்டாம் எனவும் ஶ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதேநேரம் இன்றைய கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு, விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்காக 2000 பொலிஸ் அதிகாரிகளும், 600 போக்குவரத்து பொலிஸாரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடவுள்ளனர்.

இதுதவிர போட்டியின்போது முப்படையினரும் பாதுகாப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post

ஐக்கிய அரபு எமிரேட்ஸை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த ஆப்கானிஸ்தான்!

Posted by - February 16, 2026 0
டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற 2026 ஐசிசி டி20 உலகக் கிண்ணத்தின் 28 ஆவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி ஐக்கிய அரபு எமிரேட்ஸை வீழ்த்தியது. இது…

ரி20 உலகக் கிண்ணம் – நாணய சுழற்சியில் இத்தாலி அணி வெற்றி

Posted by - February 19, 2026 0
ஐசிசி ரி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் 37ஆவது போட்டியில் இத்தாலி மற்றும் மேற்கிந்திய தீவு அணிகள் மோதவுள்ளன. இதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற…

இலங்கை அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி!

Posted by - February 23, 2026 0
ICC இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில், இலங்கை இங்கிலாந்து அணிகள் நேற்று பலபரீட்சை நடத்திய நிலையில் இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்து…

உபாதையால் நீக்கப்பட்ட மதீஷவுக்கு பதிலாக டில்ஷான் மதுஷங்க இணைப்பு.!

Posted by - February 20, 2026 0
டி20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியில் மூன்றாவது மாற்றமாக, உபாதைக்கு உள்ளான மதீஷ பதிரணவுக்கு பதிலாக இடது கை வேகப்பந்து வீச்சாளர் டில்ஷான் மதுஷங்க உத்தியோகபூர்வமாக இணைக்கப்பட்டுள்ளார்.…

ஆறு விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்திய சிம்பாப்வே!

Posted by - February 20, 2026 0
கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானத்தில் நேற்றிரவு நடந்த 2026 ஐசிசி டி:20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கையை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சிம்பாப்வே அணியானது குழு B…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *