காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் வழக்கில் நீதி கோரி வடமராட்சியில் ஆர்ப்பாட்டம்.!

410 0

பருத்தித்துறை பகுதியில் இன்று (21.02.2026) நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டம் காண்பவர்கள் அனைவரையும் கலங்கடித்தது.2007.02.15 அன்று யாழ்ப்பாணம் கலிகைச் சந்தியில் வைத்து கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் சு. இராமச்சந்திரன் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துக்கு நீதி கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வடமராட்சி ஊடக இல்லத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் பலர் கலந்து கொண்டனர்.

மேலும், கடந்த காலங்களில் கொல்லப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் நீதி கோரி போராட்டக்காரர்கள் குரல் எழுப்பினர். “நீதி கிடைக்குமா?” என்ற கேள்வி மீண்டும் வலியுறுத்தப்பட்ட நிலையில், சம்பவத்திற்கு பொறுப்பானவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.


போராட்டத்தின் போது சிரேஷ்ட ஊடகவியலாளர் மதிவாணன் கைகளும் கால்களும் இரும்புச் சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட நிலையில், இரத்தக் கறை படிந்த ஆடை அணிந்து நீதி கோரிய காட்சி பலரையும் கண்கலங்க வைத்தது.

Related Post

அக்குரேகொட படுகொ*லை விவகாரம் ஒருவர் கைது.!

Posted by - February 21, 2026 0
சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் துப்பாக்கிதாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இதேவேளை, துப்பாக்கிச் சூட்டுக்கு முன்னர் துப்பாக்கிதாரியை பன்னிப்பிட்டி தங்குமிடத்திற்கு அழைத்து…

இலங்கையில் பூனைகளிடமிருந்து பரவும் ரேபிஸ் – சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!

Posted by - February 19, 2026 0
இலங்கையில் பூனைகளிடமிருந்து ரேபிஸ் பரவுதல் அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.சுகாதார அமைச்சின் சமூக மருத்துவர் ஆலோசகர், சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் வைத்தியர் அதுல லியனபதிரன ரேபிஸ்…

கட்டுப்பாட்டை இழந்த கார் ஏற்படுத்திய விபரீதம்: ஒருவர் உயிரிழப்பு.!

Posted by - February 20, 2026 0
குருநாகல் – நாரம்மல வீதியில் நேற்று இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர் உஹமிய பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.…

சிறப்பாக நடைபெற்ற உணவுத் திருவிழா.!

Posted by - February 19, 2026 0
IMHO இன் ஏற்பாட்டில் நேற்றைய தினம் (18) PMD கலாச்சார மண்டபத்தில் “உணவுத் திருவிழா” மிகவும் சிறப்பாக நடைபெற்றது. “உணவே மருந்து”என்பதற்கிணங்க உடலுக்கு தேவையான போசணையான உணவுகளை…

சிறையில் அடைத்தாலும் நாமல் வெற்றியடைவார் – மொட்டுக் கட்சி சூளுரை.!

Posted by - February 20, 2026 0
“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின்போது நாமல் ராஜபக்ஷ சிறையில் அடைக்கப்பட்டாலும், சிறைக்குள் இருந்தே தேர்தலில் வெற்றி பெற்றவர் என்ற புதிய சரித்திரச் சாதனையை அவர் படைப்பார்” என்று ஸ்ரீலங்கா…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *