வடக்கின் சீரற்ற ஆசிரிய வளப் பரவலாக்கத்தை விரைந்து சீர்ப்படுத்துமாறு ரவிகரன் எம்.பி கோரிக்கை.!

338 0

வடக்கு மாகாணத்தின் சீரற்ற ஆசிரியவளப் பரவலாக்கத்தினால் வன்னிப் பிராந்தியத்திலுள்ள மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் பாதிக்கப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், எனவே சீரற்ற ஆசிரிய வளப் பரவலாக்கத்தை விரைந்து சீர்பபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் வடக்குமாகாண ஆளுநர் ஊடாக வடக்குமாகாணத்தில் நிலவும் சீரற்ற ஆசிரியவளப் பற்றாக்குறையைச் சீர்செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென கல்வி அமைச்சின் மேலதிகச் செயலாளரால் இதன்போது பதில் வழங்கப்பட்டுள்ளது.பாராளுமன்றக் குழு அறையில் 20.02.2026 இன்று இடம்பெற்ற கல்வி, ஊழியப்படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழுக்கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த கூட்டத்தில் தம்மால் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் நாடாளுமன்ற ரவிகரன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,நாடாளுமன்றில் 17.02.2026நேற்று இடம்பெற்ற நாடாளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலத்தின் மீதான இரண்டாம் மதிப்பீட்டு விவாதத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவையில் உள்ளீர்ப்பதற்கான போட்டிப்பரீட்சைக்கான அறிவித்தல் கடந்த 2026.02.02 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி ஊடாக வெளியாகியது.

குறித்த வர்த்தமானி அறிவித்தலில் கர்நாடக சங்கீதம், இந்து நாகரீக பாடங்களில் திறந்த மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வடமாகாணத்துக்கான விண்ணப்பம் கோரப்படாமலிருந்தது.

இந்நிலையில் கடந்த 17.02.2026அன்று வடமாகாணத்தில் கர்நாடக்சங்கீதம் மற்றும் இந்துநாகரீக பாடங்களுக்கான ஆசிரிய நியமன விண்ணப்பங்கள் கோரப்படவேண்டுமென கல்வி அமைச்சின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தேன்.

இத்தகையசூழலில் கடந்த 18.02.2026ஆம் திகதிய வர்த்தமானிமூலம் வடமாகாணத்திற்கு இந்துநாகரீகபாடத்திற்கான ஆசிரிய நியமன விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. எனவே அதற்கான கல்வி அமைச்சிற்கு குறித்த கூட்டத்தில் எனது நன்றிகளைத் தெரிவித்திருந்தேன்.

எனினும் மாகாண அடிப்படையில் இந்துநாகரீக பாடத்திற்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட 125 ஆசிரியர்களில் 93 ஆசிரியர்களே தற்போதிருப்பதாக வடமாகாணக் கல்வித்திணைக்களத்தின் புள்ளிவிபரம் சுட்டிக்காட்டுவதையும், இந்து நாகரீக பாடத்தில் வடமாகாணத்தில் 75சதவீத ஆசிரியர்களே காணப்படுவதையும் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தேன்.

மேலும் யாழ்ப்பாணத்தில் 89சதவீத ஆசிரியர்கள் காணப்படுகின்ற போதும் முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் 50சதவீத ஆசிரியர்கள், வவுனியா மாவட்டத்தில் 64சதவீத ஆசிரியர்களே உள்ளார்கள் என்பதை எடுத்துக்கூறியதுடன், இந்தப் புள்ளிவிபரம் வடமாகாணத்தில் சீரற்ற ஆசிரியர் வளப்பரவலாக்கத்தை வெளிக்காட்டுகிறது என்பதையும் சுட்டிக்காட்டினேன்.

அதேவேளை வடமாகாணத்தில் கர்நாடக சங்கீதத்திற்குரிய ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆளணி 476. தற்போதுள்ள ஆளணி 506.அந்தவகையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 132சதவீதமான கர்நாடகசங்கீத ஆசிரியர்களும், கிளிநொச்சி 92சதவீதமான ஆஙிரியர்களும், மன்னார் 72 சதவீதமான ஆசிரியர்களும், வவுனியா 60சதவீத ஆசிரியர்களும முல்லைத்தீவு 85சத வீத ஆசிரியர்களும் காணப்படுகின்றனர்.

கர்நாடக சங்கீத பாடத்திற்கு வடமாகாணத்தில் 30 ஆசிரியர்கள் மிகையாக உள்ள போதும், யாழ்ப்பாணத்தில் மட்டும் 81 ஆசிரியர்கள் மிகையாக உள்ளனர். ஆனால் வன்னிப்பெருநிலப்பரப்பில் உள்ள 6 கல்வி வலயங்களில் 46 ஆசிரியர்கள் பற்றாக்குறையாக உள்ளனர். இது வன்னிமாவட்ட பிள்ளைகளுக்கு நேரும் அநீதி என்பதையும் குறித்த கூட்டத்தில் சுட்டிக்காட்டியிருந்தேன்.

இத்தகையசூழலில் வன்னியிலுள்ள எமது பிள்ளைகள் பாடத்திற்கு ஆசிரியர்கள் இன்றி கலைத்திறன் பெற வழியற்று இரும்நிலையில், யாழ்ப்பாணத்தில் 81 கர்நாடக சங்கீத ஆசிரியர்கள் மிகையாக உள்ளனர் என்பவற்றைச் சுட்டிக்காட்டி இந்த சமச்சீரற்ற வளப்பரவலாக்கத்தை விரைந்து சீர்ப்படுத்துமாறும் வலியுறுத்தியிருந்தேன்.

மேலும் முல்லைத்தீவில் 08 கர்நாடக சங்கீத ஆசிரியர்கள் தேவையாக உள்ள நிலையில் 16 இற்கும் மேற்பட்ட கர்நாடக சங்கீத பட்டதாரிகள் முல்லைத்தீவில் மட்டும் உள்ளார்கள் என்பதைச் சுட்டிக்காட்டியதுடன், கர்நாடக சங்கீதத்திற்கான ஆசிரிய ஆட்சேர்ப்பிற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டால் முல்லைத்தீவு மாவட்டத்தின் தேவையை முல்லைத்தீவு மாவட்ட ஆளணியைக் கொண்டே நிறைவு செய்ய இயலும் என்பதையும் இதன்போது கல்வி அமைச்சின் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்தேன்.

எது எவ்வாறாயினும் வடமாகாணத்தில் காணப்படும் சமச்சீரற்ற ஆசிரியவளப் பரவலாக்கத்தை விரைந்து சீர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதை இதன்போது மீண்டும் மீண்டும் வலியுறுத்தியிருந்தேன்.இந்நிலையில் இந்த சீரற்ற ஆசிரியவளப் பரவலாக்க விடயத்தில் வடக்குமாகாண கல்வி அமைச்சிலேயே குறைப்பாடுகள் இருப்பதாக இதன்போது தெரிவித்தார்.

எனவே தாம் வடமாகாண ஆளுநருக்கு தெரியப்படுத்தி இந்த சமச்சீரற்ற ஆசிரியவளப் பரவலாக்கத்தைச் சீர்செய் நடவடிக்கை மேற்கொள்வதாகவும் கல்வி அமைச்சின் மேலதிகச் செயலாளர் தமக்கு பதில் வழங்கியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது தெரிவித்தார்.

Related Post

ஜனாதிபதி அநுர – பூட்டான் பிரதமர் ஷெரிங் தொப்கே ஆகியோருக்கு இடையில் பேச்சுவார்த்தை.!

Posted by - February 20, 2026 0
இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பூட்டான் பிரதமர் ஷெரிங் தொப்கே ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ இருதரப்புப் பேச்சுவார்த்தை நேற்று வியாழக்கிழமை பிற்பகல் நடைபெற்றது. இந்தியாவின் புதுடில்லியில்…

ஊழல் குற்றவாளிகள் சட்டத்திலிருந்து தப்ப முடியாது.!

Posted by - February 20, 2026 0
“நாமல் ராஜபக்ஷ சிறைக்குச் சென்றால் அங்கிருந்தே ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவார் என மொட்டுக் கட்சி கூறுவது வேடிக்கையானது. அவர் சிறைக்குச் செல்வது தேர்தல் வெற்றிக்காக அல்ல,…

இன்ஸ்டாகிராமில் 10 கோடி பின்தொடர்பாளர்களை கடந்த முதல் உலகத் தலைவர் – பிரதமர் மோடி!

Posted by - February 26, 2026 0
இன்ஸ்டாகிராமில் 10 கோடி பின்தொடர்பாளர்களை கடந்த முதல் உலகத் தலைவர் என்ற சாதனையைப் பிரதமர் நரேந்திர மோடி படைத்துள்ளார். பிரதமர் மோடிக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பைவிட…

யட்டியாந்தோட்டையில் சுற்றுலா பேருந்து விபத்து

Posted by - February 20, 2026 0
யட்டியாந்தோட்டைபொலிஸ் பிரிவுக்குட்பட்ட தணகொலவத்த பகுதியில், தனியார் சுற்றுலா பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (20) மாலை 4.00 மணியளவில்…

நுவரெலியா ,ஹட்டன் மாவட்ட சட்டத்தரணிகளும் பணிப்புறக்கணிப்பு

Posted by - February 16, 2026 0
தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மல்வாரச்சி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து விலகுவதாக சட்டத்தரணிகள் சங்கத்தினர் நேற்று  தெரிவித்திருந்தனர். இதற்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *