அல்லு அர்ஜுனை சந்திக்க 42 விதிகளா? – அவதூறு வழக்​கு தொடர முடிவு

352 0

பிரபல தெலுங்கு நடிக​ரான அல்லு அர்ஜுன், புஷ்பா படங்கள் மூலம் பான் இந்​தியா நடிக​ராக மாறியிருக்கிறார். விளம்பர படங்​களி​லும் நடித்து வருகிறார்.

இந்​நிலை​யில் ராயல் என்ஃபீல்ட் நிறு​வனத்​தின் பிராண்ட் உத்தி குழு​வில் பணி​யாற்றி இருக்​கும் காவேரி பருவா என்பவர், விளம்பரங்​களுக்​காக அல்லு அர்​ஜுனை சந்திக்க வேண்​டும் என்றால் அதற்கு முன் “அவர் கண்களை நேரடி​யாகப் பார்க்​கக் கூடாது, கைகுலுக்​கக் கூடாது, அனு​ம​தி​யின்றி பேசக் கூடாது, இடை​யில் நகரக் கூடாது” என்​பது உள்பட 42 கடுமை​யான விதி​கள் உள்ளன என்று கூறி​யிருந்​தார். இது சர்ச்​சை​யானது.

இதையடுத்து சமூக வலை​தளங்​களில் அல்லு அர்​ஜுனை சரமாரி​யாக ட்ரோல் செய்ய தொடங்​கினர். இந்​நிலை​யில், அல்லு அர்ஜுன் மீது கூறப்​பட்ட குற்​றச்​சாட்​டு​கள் அனைத்தும் ஆதா​ரமற்​றவை மற்​றும் உண்​மைக்​குப் புறம்பானவை என்று அவர் தரப்​பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி அவர் தரப்பில் வெளி​யிட்​டுள்ள அறிக்கையில், “அல்லு அர்​ஜுன் எப்​போதும் மரி​யாதை​யுட​னும் கண்ணியத்​துட​னும் நடந்து கொள்​பவர். இது​போன்​ற பொய்​யான குற்​றச்​சாட்​டு​களைத் தீவிர​மாக எடுத்​துக் கொள்​கிறோம். இதற்​குக் காரண​மானவர்​கள் மீது அவதூறு வழக்​குத் தொடர எங்​கள் சட்​டக் குழு தயா​ராக உள்​ளது” என்று அதில் கூறப்​பட்​டுள்​ளது.

Related Post

சூர்யா நடிக்கும் அடுத்த படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்க இருப்பதாக பேச்சுவார்த்தை.!

Posted by - February 19, 2026 0
சூர்யா நடிக்கும் அடுத்த படத்தை இயக்க அஸ்வத் மாரிமுத்து உடனான ஆரம்ப பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. ‘டிராகன்’ படத்தின் வெற்றிக்கு பிறகு, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தையும்…

சிவகார்த்திகேயனுக்கு நாயகியாகும் பாக்யஸ்ரீ?

Posted by - February 15, 2026 0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில் நாயகியாக நடிக்க பாக்யஸ்ரீ போஸிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க முதலில் திட்டமிட்டார் சிவகார்த்திகேயன். ஆனால், அப்படம் தயாராக…

3 நாட்களில் பூக்கி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?

Posted by - February 16, 2026 0
நடிகர் விஜய் ஆண்டனி தயாரித்து, இசையமைத்து கடந்த வாரம் வெளிவந்த படம் பூக்கி. இப்படத்தில் அஜய் ஹீரோவாக நடித்திருந்தார். இவர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த மார்கன் படத்தில்…

நடிகர் எரிக் டேன் காலமானார்.!

Posted by - February 20, 2026 0
கிரேஸ் அனாடமி, யூபோரியா தொடர்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் எரிக் டேன் நரம்பியல் பாதிப்பினால் அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று அவரது 53 வயதில் காலமானார்.

புதிய பட அறிவிப்பு இல்லாததால் அஜித் ரசிகர்கள் ஏக்கம்.!

Posted by - February 23, 2026 0
சினிமாவில் ‘தல’ என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அஜித் குமார் தற்போது புதிய படப்பிடிப்பில் ஈடுபடாமல் இருப்பது அவரது ரசிகர்களிடையே கவலை ஏற்படுத்தியுள்ளது.அவர் நடித்த குட் பேட் அக்லி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *