நுவரெலியா ,ஹட்டன் மாவட்ட சட்டத்தரணிகளும் பணிப்புறக்கணிப்பு

310 0

தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மல்வாரச்சி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து விலகுவதாக சட்டத்தரணிகள் சங்கத்தினர் நேற்று  தெரிவித்திருந்தனர்.

இதற்கு ஆதரவாக இன்று நுவரெலியா மாவட்ட நீதிமன்றம் மற்றும் ஹட்டன் நீதவான் நீதிமன்றம் எதிர்ப்பு தெரிவித்து சட்ட தரணிகள் இன்றை தினம் தமது கடமைகளில் இருந்து விலகியிருந்தனர்.

இதன் காரணமாக நீதிமன்ற நடவடிக்கைகள் முழுமையாக ஸ்தம்பித்திருந்தன இதில் ஹட்டன் மாவட்ட மற்றும் நீதவான் நீதிமன்றங்களின் வழக்கறிஞர்கள் கருப்புக் கொடியை ஏற்றி நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து விலகிருந்தனர்.

சட்டதரணிகள் வருகை தராததன் காரணமாக நுவரெலியா மற்றும் ஹட்டன் மாவட்ட நீதிமன்றங்களின் சில வழக்குகள் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை .

விசாரணைக்கு வந்திருந்த வழக்குகளில் வழக்கறிஞர்கள் ஆஜராக காரணத்தால் அனைத்து வழக்குகளையும் வேறு திகதி வழங்கி இது தொடர்பான வழக்கு விசாரணைகள் பிற்போடப்பட்டுள்ளன.

Related Post

மூலோபாய முதலீடுகளுக்கு 10 ஆண்டுகள் வரை வரிச் சலுகை!

Posted by - February 16, 2026 0
சுற்றுலா, உற்பத்தி மற்றும் வேளாண் துறைகளில் மூலோபாய மேம்பாட்டுத் திட்டங்களில் முதலீடுகளுக்கு 10 ஆண்டுகள் வரை வரிச் சலுகைகளை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. நிதி, பொருளாதார…

விசேட சுற்றிவளைப்பில் பலர் கைது.!

Posted by - February 19, 2026 0
பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, நாடளாவிய ரீதியில் நேற்று புதன்கிழமை (18) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, 549 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.…

எல்லை மீறல் நியாயமற்றது : தமிழக மீனவர்கள் தொடர்பில் வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் கடும் கண்டனம்.!

Posted by - February 21, 2026 0
வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் செயலாளர் என்.எம். ஆலம், தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லையை மீறி தொழில் செய்வது குற்றச் செயலாகும் என்றும், அதனை தொடர்ந்து செய்து…

நாடு திரும்பினார் ஜனாதிபதி!

Posted by - February 21, 2026 0
புதுடில்லியில் நடைபெற்ற ‘AI Impact 2026’ மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, தனது இந்திய விஜயத்தை முடித்துக்கொண்டு  நாடு திரும்பியுள்ளார். ஜனாதிபதி மற்றும் இலங்கை…

விரைவில் தேர்தல் நடத்தப்படும்; செல்வாக்கு யாருக்கு என்பது தேர்தல் களத்தில் தெரியும்.!

Posted by - February 20, 2026 0
மக்கள் செல்வாக்கை நிரூபித்துக் காட்ட மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசுக்கு விடுத்துள்ள சவாலுக்கு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *