சுப்பர் எட்டு சுற்றில் இந்தியாவை வெற்றிகொண்ட தென் ஆபிரிக்கா.!

300 0

இந்தியாவும் இலங்கையும் கூட்டாக நடைத்திவரும் ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணத்தில் நேற்று இடம்பெற்ற சுப்பர் 8 போட்டியில் இந்திய அணியும் தென்னாப்பிரிக்க அணியும் மோதியிருந்தன

அதன்படி போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.அஹமதாபாத்தில் ஆரம்பமான இப்போட்டியில் முதலில் துடுப்பாடிய தென்னாப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 187 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

தென்னாப்பிரிக்க அணி சார்பில் துடுப்பாட்டத்தில் டேவிட் மில்லர் 63 ஓட்டங்களையும், டேவிட் பிராவிஸ் 45 ஓட்டங்களையும், திரிட்ஸ்டன் ஸ்டப்ஸ் 44 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தனர்.இந்திய அணி சார்பில் பந்துவீச்சில் ஜஸ்பிரிட் பும்ரா அதிகபட்சமாக 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இந்நிலையில் 188 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய இந்திய அணி 18.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 111 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 76 ஓட்டங்களால் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Post

உபாதையால் நீக்கப்பட்ட மதீஷவுக்கு பதிலாக டில்ஷான் மதுஷங்க இணைப்பு.!

Posted by - February 20, 2026 0
டி20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியில் மூன்றாவது மாற்றமாக, உபாதைக்கு உள்ளான மதீஷ பதிரணவுக்கு பதிலாக இடது கை வேகப்பந்து வீச்சாளர் டில்ஷான் மதுஷங்க உத்தியோகபூர்வமாக இணைக்கப்பட்டுள்ளார்.…

ஆறு விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்திய சிம்பாப்வே!

Posted by - February 20, 2026 0
கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானத்தில் நேற்றிரவு நடந்த 2026 ஐசிசி டி:20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கையை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சிம்பாப்வே அணியானது குழு B…

ரசிகர்கள் எதிர்பார்த்த இந்தியா – பாக்கிஸ்தான் அணிகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று மோதுகின்றன!

Posted by - February 15, 2026 0
2026 ஆம் ஆண்டு இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் அனைவரினதும் கவனத்தை ஈர்த்துள்ள இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி, இன்று…

டி:20 உலகக் கிண்ணம்; இன்று இலங்கை – சிம்பாப்வே இடையிலான போட்டி.!

Posted by - February 19, 2026 0
2026 ஐசிசி ஆடவர் டி:20 உலகக் கிண்ணத்தில் இன்று (19) நடைபெறும் போட்டியில் இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகள் மோதுகின்றன.இந்தப் போட்டியானது இன்று பிறப்கல் 3.00 மணிக்கு…

பாகிஸ்தானை இலகுவாக வீழ்த்தி சூப்பர் எட்டு சுற்றுக்கு முன்னேறிய இந்தியா!

Posted by - February 16, 2026 0
கொழும்பில் அமைந்துள்ள ஆர்.பிரேமதாச மைதானத்தில் நேற்றிரவு நடந்த ஐசிசி டி:20 உலகக் கிண்ணத் தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை 61 ஓட்டங்கள் வித்தியாசத்தில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *