இலங்கை அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி!

49 0

ICC இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில், இலங்கை இங்கிலாந்து அணிகள் நேற்று பலபரீட்சை நடத்திய நிலையில் இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்து அணி 51 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

ஐசிசிஇருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில், இலங்கை அணி பங்கேற்றுள்ள முதல் போட்டி கண்டி, பல்லேகல சர்வதேச மைதானத்தில் நேற்று பிற்பகல் ஆரம்பமானது

பிற்பகல் 3.00 மணிக்கு கண்டி, பல்லேகல சர்வதேச மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.இதன்படி முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 146 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

இங்கிலாந்து அணி சார்பில் பில் சோல்ட் 62 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தார்.இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் துனித் வெல்லாலகே 3 விக்கெட்டுக்களையும், மகேஷ் தீக்‌ஸன 2 விக்கெட்டுக்களையும், டில்சான் மதுஷங்க 2 விக்கெட்டுக்களையும், துஷ்மந்த சமீர ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதன்படி 147 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய இலங்கை அணி 16.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 95 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.

Related Post

சுப்பர் எட்டு சுற்றில் இந்தியாவை வெற்றிகொண்ட தென் ஆபிரிக்கா.!

Posted by - February 23, 2026 0
இந்தியாவும் இலங்கையும் கூட்டாக நடைத்திவரும் ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணத்தில் நேற்று இடம்பெற்ற சுப்பர் 8 போட்டியில் இந்திய அணியும் தென்னாப்பிரிக்க அணியும் மோதியிருந்தன அதன்படி…

ரி20 உலகக் கிண்ணம் – நாணய சுழற்சியில் இத்தாலி அணி வெற்றி

Posted by - February 19, 2026 0
ஐசிசி ரி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் 37ஆவது போட்டியில் இத்தாலி மற்றும் மேற்கிந்திய தீவு அணிகள் மோதவுள்ளன. இதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற…

டி20 உலகக் கிண்ணம்: சூப்பர் 8 சுற்று – அணிகள், போட்டி விபரம்.!

Posted by - February 19, 2026 0
2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தான் அணியின் அபார வெற்றி அவர்களை சூப்பர் 8 கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. கொழும்பில் நடைபெறும் சூப்பர் 8…

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான்

Posted by - February 15, 2026 0
2026 உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று இரவு கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில்…

நேபாளம் அணிக்கு எதிரான போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி!

Posted by - February 15, 2026 0
உலக கிண்ண 20/20 கிரிக்கெட் தொடரில் இன்று (15) இடம்பெற்ற நேபாளம் அணிக்கு எதிரான போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. இன்று…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *