கலிபோர்னிய பனிச்சரிவில் சிக்கி எட்டு பேர் உயிரிழப்பு.!

97 0

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஏற்பட்ட கடுமையான பனிச்சரிவில் பனிச்சறுக்கு வீரர்கள் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிளாக்பேர்ட் மவுண்டன் கைட்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்த 15 பேர் கொண்ட குழு, லேக் தாஹோ அருகிலுள்ள சியரா நெவாடா பகுதியில் பனிச்சறுக்கு பயணம் மேற்கொண்டனர்.

கடந்த 17ம் திகதி, கேஸ்டில் பீக் பகுதியில் திடீரென வீசிய புயலால் பனிச்சரிவு ஏற்பட்டது. இதனால் குழுவினரின் அனைவரும் சிக்கிக்கொண்டனர்.உடனடியாக மீட்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்ட மீட்புக் குழு, 6 பேரை உயிருடன் மீட்டது.

ஆனால் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஒருவர் காணாமல் போய், அவரை தேடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.நெவாடா கவுண்டிமேயர் ஷானன் மூன் கூறுகையில், “1981ம் ஆண்டு மவுண்ட் ரெய்னியரில் 11 பேர் உயிரிழந்த பனிச்சரிவுக்கு பிறகு, அமெரிக்காவில் நிகழ்ந்த மிக மோசமான சம்பவமாக இது அமைந்துள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் நிகழ்ந்த மிக மோசமான பனிச்சரிவாக இது கருதப்படுகிறது” என்று தெரிவித்தார்.

Related Post

மூன்றில் இரண்டு பங்கு கனேடியர்கள் அமெரிக்கா பிரச்சினைகளை உருவாக்குகிறது எனக் கருத்து.!

Posted by - February 20, 2026 0
சமீபத்திய ஆய்வில், கனடாவில் பெரும்பான்மையானோர் அமெரிக்காவை கனடாவின் கூட்டாளர் அல்ல என்றும், ரஷ்யாவைவிட உலக அமைதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்றும் கருதுகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. அமெரிக்கா மற்றும்…

கிரீன்லாந்து விவகாரம் தீவிரம்: அமெரிக்க கருத்துக்கிடையில் டென்மார்க் மன்னர் பயணம்.!

Posted by - February 20, 2026 0
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில், அந்தத் தீவு மக்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தும் நோக்கில் டென்மார்க் மன்னர்…

வேற்றுகிரகவாசிகள் குறித்த ரகசிய தகவல்களை வெளியிட டிரம்ப் உத்தரவு.!

Posted by - February 20, 2026 0
வேற்றுகிரகவாசிகள் தொடர்பான அமெரிக்க அரசின் ரகசிய ஆவணங்களை வெளியிட ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.அமெரிக்காவின் நெவாடா பகுதியில் ”ஏரியா-51”ல் வேற்றுகிரகவாசியை வைத்து ரகசியமாக ஆய்வு செய்து வருவதாக தகவல்கள்…

இந்தியா – பாகிஸ்தான் மோதலைத் தணிப்பதற்கு ட்ரம்ப் வலியுறுத்தல்.!

Posted by - February 20, 2026 0
2025 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான இராணுவ மோதலை நிறுத்துவதற்கான தனது கூற்றை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். வியாழக்கிழமை நடைபெற்ற…

நார்தாம்ப்டனில் கத்திக்குத்து காயங்களுக்கு உள்ளாகி இளைஞர் உயிரிழப்பு!

Posted by - February 19, 2026 0
நார்தாம்ப்டனில் உள்ள ஒரு ஸ்கேட் பூங்காவில் கத்திக்குத்து காயங்களுக்கு உள்ளான நிலையில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பதின்ம வயது சிறுவன் ஒருவன் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.பிரையர் ஹில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *