எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 25 இந்திய மீனவர்கள் கைது

124 0

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 25 இந்திய மீனவர்கள், இரண்டு படகுகளுடன் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து நேற்றும் (15) இன்றும் (16) இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கமாண்டர் புத்திக சம்பத் தெரிவித்தார்.

கைதான 25 பேரும் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் மேலதிக சட்டநடவடிக்கைகளுக்காக கைதான மீனவர்கள் மற்றும் படகுகளும் காங்கேசன்துறை கடற்றொழில் பரிசோதகர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

கைதானவர்கள் காரைக்கால் பகுதியை சேர்ந்த மீனவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

Related Post

இலங்கையர்களுக்கு இந்தி கற்பதற்கு இந்தியா உதவி

Posted by - February 16, 2026 0
இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், ஆக்ராவில் உள்ள கேந்திரிய இந்தி சன்ஸ்தான் (மத்திய இந்தி நிறுவனம்) நிறுவனத்தில் 2026-2027 கல்வியாண்டிற்காக இலங்கையர்களுக்கு இந்தி கற்க உதவித்தொகைகளை…

கட்டுப்பாட்டை இழந்த கார் ஏற்படுத்திய விபரீதம்: ஒருவர் உயிரிழப்பு.!

Posted by - February 20, 2026 0
குருநாகல் – நாரம்மல வீதியில் நேற்று இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர் உஹமிய பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.…

அக்குரேகொட படுகொ*லை விவகாரம் ஒருவர் கைது.!

Posted by - February 21, 2026 0
சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் துப்பாக்கிதாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இதேவேளை, துப்பாக்கிச் சூட்டுக்கு முன்னர் துப்பாக்கிதாரியை பன்னிப்பிட்டி தங்குமிடத்திற்கு அழைத்து…

வடக்கு மாகாணத்தில் ‘நிழல் அமைச்சர்கள்’ நியமனம்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றச்சாட்டு.!

Posted by - February 20, 2026 0
வடக்கு மாகாண சபை இயங்காமல் இருக்கின்ற நிலையில், மாகாண அதிகாரங்களுக்கு உட்பட்ட ஒவ்வொரு துறைக்கும் நிழல் அமைச்சர்களை நியமித்து ஆட்சி செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று…

விரைவில் தேர்தல் நடத்தப்படும்; செல்வாக்கு யாருக்கு என்பது தேர்தல் களத்தில் தெரியும்.!

Posted by - February 20, 2026 0
மக்கள் செல்வாக்கை நிரூபித்துக் காட்ட மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசுக்கு விடுத்துள்ள சவாலுக்கு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *