கோர விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.!

301 0

கொழும்பு துறைமுக வளாகத்தில் நேற்று பிற்பகல் பாரந்தூக்கி இயந்திரமொன்று உந்துருளி மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் ரிதிகம பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

துறைமுக வளாகத்தின் மூன்றாம் கட்டத்திலிருந்து இரண்டாம் கட்டத்திற்குச் சென்று கொண்டிருந்த குறித்த பாரந்தூக்கி இயந்திரம், முன்பக்கத்திலிருந்து அதேதிசையில் சென்று கொண்டிருந்த உந்துருளி மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் உந்துருளியைச் செலுத்தி சென்றவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்துடன் தொடர்புடைய பாரந்தூக்கி இயந்திரத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கரையோர பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Post

சிறப்பாக நடைபெற்ற உணவுத் திருவிழா.!

Posted by - February 19, 2026 0
IMHO இன் ஏற்பாட்டில் நேற்றைய தினம் (18) PMD கலாச்சார மண்டபத்தில் “உணவுத் திருவிழா” மிகவும் சிறப்பாக நடைபெற்றது. “உணவே மருந்து”என்பதற்கிணங்க உடலுக்கு தேவையான போசணையான உணவுகளை…

கஞ்சாவுடன் குடும்பப் பெண் கைது.!

Posted by - February 20, 2026 0
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு 10ஆம் வட்டாரம் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய குடும்பப் பெண் ஒருவர், தனது வீட்டில் விற்பனை நோக்கத்திற்காக கஞ்சா வைத்திருந்த குற்றத்திற்காக கைது…

தாளையடி நன்னீர் திட்ட நிறுவனத்தின் முறையற்ற செயற்பாடு!

Posted by - February 20, 2026 0
வடமராட்சி கிழக்கு உடுத்துறை வேம்படி பகுதியில் தாளையடி நன்னீர் திட்ட நிறுவன அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.வடமராட்சி கிழக்கின் பல பகுதியில் தாளையடி…

விசாரணைக்கு வருவதற்கு ரணிலின் மனைவி மறுப்பு; உடல்நிலையைக் காரணம் காட்டி சி.ஐ.டிக்கு கடிதம்.!

Posted by - February 20, 2026 0
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மனைவி பேராசிரியர் மைத்ரி விக்கிரமசிங்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இன்று ஆஜராக முடியாது என அறிவித்துள்ளார்.…

சிறுநீரகத்தை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்ட முன்னாள் பெண் போராளி: காரணமான இருந்த கந்துவட்டி கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும் – வேந்தன் கண்டனம்.!

Posted by - February 21, 2026 0
மன்னார் பகுதியில் கந்துவட்டி தொல்லையைத் தாங்க முடியாமல், முன்னாள் பெண் போராளி ஒருவர் தனது ஒரு சிறுநீரகத்தை கொழும்பு சென்று விற்று கடனை அடைத்த சம்பவம் அதிர்வலைகளை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *