Category: இலங்கை (ஈழம்) Published Date Hits: 91
தேமுதிகவை சேர்ந்த பேராவூரணி சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான அருண் பாண்டியன் கடந்த சில தினங்களுக்கு முன்பாக இலங்கை விஜயம் மேற்கொண்டு யாழ்ப்பாணத்திற்கு சமூகமளித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
யாழ் இணுவில் நகரில் தங்கியிருந்துள்ள அவர் யாழ் பொதுமக்களை சந்தித்து பேசியுள்ளதுடன், யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளுக்கு சென்று புகைப்படங்கள் எடுத்துள்ளதாகவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐங்கரன் இண்டர்நேஷனல் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர் கருணாமூர்த்தியும், அவருடன் வந்திருந்ததாகவும், அருண் பாண்டியன் தனது இலங்கை பயண அனுபவங்களை புதுக்கோட்டை இடைத்தேர்தலின் தேமுதிக தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தி கொள்ள கூடும் என எதிர்பார்க்கலாம் எனவும் அத்தகவல்கள் கூறுகின்றன.